வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு முழு விவரம்
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு… வங்கிகளுக்கு விடுமுறை….!!! தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்த விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். இந்த நிலையில் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
bank holidays in january 2024 அதன்படி
ஜனவரி 13 இரண்டாவது சனிக்கிழமை,விடுமுறை,
ஜனவரி 14 ஞாயிற்றுக்கிழமை மற்றும் போகி பண்டிகை விடுமுறை,
ஜனவரி 15 தைப்பொங்கல்,விடுமுறை,
ஜனவரி 16 திருவள்ளுவர் தினம் விடுமுறை,
மற்றும் ஜனவரி 17 உழவர் திருநாள் விடுமுறையாகும்..
எனவே இன்று முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!
மொபைல் வங்கி சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் இதற்கேற்றவாறு தங்களின் பணத்தேவையை திட்டமிட்டு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்
.jpg)