கலர் கலரா மாற்றலாம் 5 நிறங்களில் தீம் வாட்ஸ்அப்பில் புது அப்டேட் முழு விவரம் whatsapp color change update
வாட்ஸ்அப்பில் புதிதாக 5 நிறங்களில் தீம்களை கொண்டு வரவுள்ளதாக மெட்டா நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது இதன் மூலம் notification நிறங்களை கூட பயனர்களுக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொள்ள முடியும். பச்சை, நீலம், வெள்ளை, பிங்க், ஊதா ஆகிய நிறங்களில் இந்த தீம்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன
வாட்ஸ் அப்பில் புதிதாக ஐந்து நிறங்களில் தீம்களை கொண்டு வரவுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நோடிபிகேஷனைத் (Notification) பயனர்கள் தங்களுக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொள்ள முடியும். இந்த தீம்கள் பச்சை, நீலம், வெள்ளை பிங்க், ஊதா ஆகிய நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பின் பயனர்களுக்கு ஏற்றவாறு பல கலர்களை சேர்க்கவும் பரிசீலித்து வருகிறது. தற்போது இந்த அப்டேட் பீட்டா சோதனையில் உள்ளது.
வாட்ஸப் நிறத்தை மாற்றுவது எப்படி:-
வாட்ஸ் அப் நிறத்தை மாற்ற , முதலில் உங்கள் செல்போனில் வாட்ஸ்-அப் கிளிக் செய்து ஓப்பன் செய்யவும்
அடுத்து வாட்ஸ்-அப் செயலியின் வலது பக்கம் மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைக் க்ளிக் செய்யவும்.
அதில் வாட்ஸ்-அப் செட்டிங்ஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அதன்பின்பு அதில் "சாட்கள்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சாட்கள் பிரிவு ஓபன் ஆனதும், அதில் "தீம்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது வாட்ஸ்-அப் தீம்களில், சிஸ்டம் டீ ஃபால்ட் , லைட் மற்றும் டார்க் என்கிற வகைகள் இருக்கும். அதன்பின்னர் பச்சை, நீலம், வெள்ளை, பிங்க், ஊதா என ஐந்து நிறங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
Tags: தொழில்நுட்பம்
