Breaking News

வங்கதேசத்தில் பயணிகள் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து... 5 பேர் உடல் கருகி பலியான சோகம் அதிர்ச்சி வீடியோ Bangladesh Train Fire

அட்மின் மீடியா
0

மேற்கு வங்க மாநிலமான பெனபோலில் இருந்து புறப்பட்ட பெனபோல் எக்ஸ்பிரஸ் வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள கமலாபூர் ரயில் நிலையம் அருகில் சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் இரவு 9 மணியளவில் ரயிலுக்கு தீ வைத்துள்ளனர். வங்கதேசத்தில் நாளை பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது




வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள கோபிபாக்கில் பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரயிலின் நான்கு பெட்டிகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. 

வங்கதேசத்தின் ஜெஸ்ஸோரில் இருந்து தலைநகர் டாக்காவுக்கு நேற்றிரவு பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. இரவு 9 மணியளவில் கோபிபாக்கில் இந்த ரயில் வந்தபோது, ரயிலின் 4 பெட்டிகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. 4 பெட்டிகளில் பயங்கரமாக தீ பற்றியது. 

சம்பவ இடத்துக்கு ஏழு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இதில் சிக்கி, இரு சிறுவர்கள் உட்பட, 5 பேர் உடல் கருகி பலியாகினர். ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, பயணிகள் மீட்கப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. இருப்பினும் இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

வங்கதேசத்தில் நாளை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் வங்கதேசத்தில், இன்று காலை 6 மணி முதல் வரும் திங்கள்கிழமை காலை 6 மணி வரை 48 மணி நேர கடையடைப்பு போராட்டத்துக்கு எதிர்க்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/SwapnaAkter12/status/1743373699850617074

வீடியோ பார்க்க:-

https://twitter.com/WorldTimesWT/status/1743490094210961874

வீடியோ பார்க்க:-

https://twitter.com/neha_bisht12/status/1743525171556716757

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback