5 நிமிடம் கங்கையில் முழ்கினால் கேன்சர் சரியாகும் என்ற பெற்றோரின் மூடநம்பிக்கையால் 5 வயது சிறுவன் உயிரிழப்பு! வைரல் வீடியோ 5 year old boy with cancer dipped in Ganga in hope of ‘miracle cure’ dies
கங்கையில் புனித நீராடினால் தங்கள் மகன் புற்றுநோயில் இருந்து குணமடைவான் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையால், பெற்றோர் கங்கை நதியில் மூழ்கடித்ததால் 5 வயது சிறுவன் உயிரிழப்பு!
இரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த 5 வயது சிறுவன் ரவியை அதிசயம் நடக்கும் என்ற மூட நம்பிக்கையில் கங்கையில் ஐந்து நிமிடம் நீரில் முழ்கடித்ட்தார் அத்தை சுதா.
இந்த சம்பவத்தைப் பார்த்த சிலர் குழந்தையை வெளியே எடுத்தனர், ஆனால் அதற்குள் சிறுவன் இறந்துவிட்டான்.
டெல்லி சோனியா விஹார் பகுதியில் பூ வியாபாரம் செய்பவர் ராஜ்குமார் சைனி இவரது 5 வயது மகன் ரவி-க்கு உடல்நிலை சரியில்லாததை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு ரவிக்கு ரத்த புற்றுநோய் முற்றிய நிலையில் உள்ளதை அடுத்து அவரை மருத்துவமனையில் வைத்து பார்க்க முடியாது என்று வீட்டிற்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து ரவியின் தாய் சாந்தியின் சகோதரி சுதா கங்கையில் நீராடினால் அனைத்தும் சரியாகும் என கூறியதை அடுத்து அரவியை அழைத்துக் கொண்டு அவரது பெற்றோர் ராஜ்குமார் மற்றும் சாந்தி உடன் சென்ற சுதா உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள் ஹர் கி பவுரிக்கு நேற்று (ஜனவரி 24) மதியம் வந்துள்ளார்கள்
கங்கை நதிக்கரையில் உள்ள ஹர்கி படித்துறை அருகே கங்கையில் இறங்கி நீராடி உள்ளனர்.அப்போது ரவியை 5 நிமிடம் முழ்கி வைத்திருந்தால் அவனது நோய் சரியாகிவிடும் என அந்த சிறுவனை நதியில் மூழ்கடித்துபெற்றோர் பிரார்த்தனை செய்துள்ளனர். நீருக்கடியில் நீண்ட நேரம் குழந்தையை மூழ்கியே வைத்துள்ளனர். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து கேட்டதற்க்கு பதில் அவர்களை திட்டியுள்ளார்கள்,
உடனே சிலர் நதியில் இறங்கி அவர்களிடம் இருந்து சிறுவனை மீட்டுள்ளார்கள், அக்கம் பக்கத்தினர் தலையிட்டு வலுக்கட்டாயமாக குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த குழந்தையின் அத்தை, சிறுவனைக் காப்பாற்றியவர்களைத் தாக்க முயன்றார். ஆனால் அதற்க்குள் சிறுவன் மூச்சு திணறி இறந்து விட்டான் இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்திருந்தார், தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தையை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கும் டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிறுவனை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் குழு அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
வீடியோ பார்க்க:-
இங்கு கிளிக் செய்யவும்;-
https://twitter.com/HateDetectors/status/1750225080934916245
இங்கு கிளிக் செய்யவும்;-
https://twitter.com/AnupamTrivedi26/status/1750378591278538999
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
