சாலையோர தடுப்புச் சுவர் மீது கார் மோதிய விபத்தில் வேளாங்கண்ணி சென்ற 4 பேர் பலியான சோகம்
தூத்துக்குடியில் இருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தலத்திற்கு நேற்று இரவு பக்தர்கள் சிலர் டவேரா காரில் புறப்பட்டனர். கிழக்கு கடற்கரைச் சாலை தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மனோரா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு சுவர் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் விபத்தில் சின்னபாண்டி (35), பாக்கியராஜ் (60), ஞானம்மாள் (60), ராணி (40) ஆகியோர் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.
இகுறித்த தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் போலீஸார் விரைந்து வந்து, படுகாயம் அடைந்த ஒரு சிறுவன், பெண்கள் உட்பட ஏழு பேரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அத்துடன் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க வந்த பக்தர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Tags: தமிழக செய்திகள்
