புதுச்சேரியில் புதிதாக கட்டிய 3 மாடி வீடு புதுமனை புகுவிழா நடத்தும் முன் சரிந்து விழுந்த கட்டிடம் வைரல் வீடியோ collapsed house in puducherry
புதுச்சேரியில் புதிதாக கட்டிய 3 மாடி வீடு புதுமனை புகுவிழா நடத்தும் முன் சரிந்து விழுந்த கட்டிடம் வைரல் வீடியோ
புதுச்சேரியில் 3 மாடி வீடு சரிந்து விழுந்த நேரடி வீடியோ கால்வாய் அருகே 3 மாடியில் கட்டிய புதிய வீடு சீட்டுகட்டு போல் இடிந்து விழுந்து விபத்து நேரடி வீடியோ
புதுச்சேரியில் உள்ள உப்பளம் உப்பனாரு வாய்க்கால் அருகே சாவித்திரி என்பவர் 3 மாடியில் புதிதாக வீடு கட்டியுள்ளார் இன்று வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சில தினங்களில் புதுமனை புகுவிழா நடைபெற இருந்த நிலையில் வீடு இடிந்து விழுந்தது வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது
புதுச்சேரி ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாவித்திரி. இவரது கணவர் ரங்கநாதன் உயிரிழந்துவிட்டார் இவர் தனது மகள் சித்ரா மற்றும் மருமகன் சுரேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இவர்கள் அதே பகுதியில் அரசு இலவசமாக கொடுத்த பட்டா இடத்தில் வீடு கட்டி வந்தனர். இந்த வீட்டின் கட்டுமான பணிகள் கடந்த மாதம் முடிந்த நிலையில், வருகின்ற 26 ஆம் தேதி வீட்டின் புதுமனை புகுவிழா நடத்த இருந்த நிலையில்
வீட்டின் அரசு சார்பாக அருகில் செல்லும் கால்வாய்க்கு சுவர் கட்டும் பணி கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வருகிறது.
அதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாவித்திரி வீட்டருகே வாய்கலுக்கு சுவர் கட்டுவதற்காக பள்ளம் எடுக்கப்பட்டது. அப்போது புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி வீடு லேசாக சாய்ந்துள்ளது
இதனால் அதிர்ச்சியடைந்த சாவித்திரி இதுதொடர்பாக கால்வாய் சுவர் கட்டும் அரசு ஒப்பந்ததாரரிடம் முறையிட்டார்
இதுசம்மந்தமாக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர், ஆகியோர் வீட்டின் தரத்தை ஆய்வு செய்ய நேற்று மாலை வந்து பேசிகொண்டிருந்தபோது வீடு திடீரென முற்றிலுமாக சரிந்து விழுந்தது.
வீடு இடிந்து விழுந்தது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவவும், அதற்கு பின்னரே வீடு அதிக உயரத்தில் தரமன்றி கட்டப்பட்டதால் சரிந்து விழுந்ததா? அல்லது வாய்க்காலுக்கு பள்ளம் எடுத்ததால் விழுந்ததா என தெரியவரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த வீடு இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை. இந்நிலையில்
மேலும் சரிந்து விழுந்த வீட்டினர் தங்க ஏற்பாடும் இடிந்து விழுந்த வீட்டிற்க்கு ந்நிதி உதவியும், வேறு புதிய வீடு கட்டி தரப்படும் என முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளர். மேலும் தற்போது வீடு இடிந்து விழந்த வீடியோ வைரல் ஆகிவருகின்றது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://twitter.com/geetamilnews/status/1749378852986708162
Tags: புதுச்சேரி செய்திகள் வைரல் வீடியோ
