நெடுஞ்சாலையில் திடீரென பஞ்சர் - எதிர் திசையில் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து 3 பேர் பலி சிசிடிவி வீடியோ accident in West Godavari Dist
நெடுஞ்சாலையில் திடீரென பஞ்சர் - எதிர் திசையில் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து 3 பேர் பலி சிசிடிவி வீடியோ
ஆந்திர மாநிலம் தேவாரப்பள்ளி பகுதியில், விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரிக்கு தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் டயர் பஞ்சரானதில், நிலைதடுமாறிய கார், எதிர்புறச் சாலையில் பாய்ந்தது.
அச்சமயம் எதிர் திசையில் வேகமாக வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மீது அந்தகார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது, இந்த கோர விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு தேவாரப்பள்ளி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதில் சிகிச்சைப் பலனளிக்காமல் 2 வயது பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இ
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விபத்து தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
வீடியோ பார்க்க:-
இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/upuknews1/status/1742160097374310521
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
