Breaking News

பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் நீக்கம் 3 Maldives ministers who abused India suspended by Maldives govt

அட்மின் மீடியா
0

கடந்த 2 நாட்களுக்கு முன்பு லட்சத்தீவு சென்றிருந்த பிரதமர் மோடி ஆழ்கடல் பகுதியில் நீந்தி பவளப்பாறைகளை படம் பிடித்த வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. 




இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்த மோடி, லட்சத்தீவு வெறும் தீவுகளின் கூட்டமல்ல. காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரியமான மரபு மற்றும் மக்களுக்கான சான்று. கற்பதற்கும் வளர்வதற்குமான வாய்ப்பாக தனது பயணம் அமைந்தது.பிரமிக்க வைக்கும் லட்சத்தீவு அழகையும், அங்கு வாழும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பையும் கண்டு நான் பிரமிப்பில் உள்ளேன். அகத்தி, பங்காரம்,கரவட்டி ஆகிய இடங்களில் மக்களுடன் உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்களது உபசரிப்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் மாலத்தீவு அமைச்சர்களான மரியம் ஷியுனா, மால்ஷா ஷரீஃப், மசூம் மஜீத் ஆகியோர் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் மோடி லட்சத்தீவில் எடுத்த புகைப்படங்களை பகிரிந்து அவதூறு கருத்து தெரிவித்திருந்தனர்.

உயிர் காக்கும் உடை அணிந்த மோடி இஸ்ரேஸின் கைப்பாவை என மரியம் ஷியுனா கூறியிருந்தார்.

மேலும் மூன்று அமைச்சர்கள் கருத்துக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் மற்றும் முன்னாள் அமைச்சர் அப்துல்லா ஷாகித் ஆகியோர் கண்டம் தெரிவித்திருந்தனர். 

அதனை அடுத்து மாலத்தீவு அரசாங்கம், வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மரியம் ஷியுனா கூறிய இழிவான கருத்துகள் நிராகரிப்படுகிறது, அவை மாலத்தீவு அரசின் கருத்துகள் அல்ல என்று தெரிவித்திருந்தது

மேலும் மூன்று மாலத்தீவு அமைச்சர்களும் நீக்கம் செய்து மாலத்தீவு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback