Breaking News

29 வது மாடியில் இருந்து SKYDIVE செய்யும்போது பாரஷூட் வேலை செய்யாததால் கீழே விழுந்து உயிரிழந்த ஸ்கைடைவர்! வைரல் வீடியோ British skydiver Nathy Odinson dies

அட்மின் மீடியா
0

29 மாடி கட்டடத்தில் இருந்து SKYDIVE செய்யும்போது பாரஷூட் வேலை செய்யாததால் கீழே விழுந்து உயிரிழந்த ஸ்கைடைவர்! வைரல் வீடியோ  British skydiver Nathy Odinson dies

பிரிட்டனில் வசித்து வருபவர் பிரபல 'ஸ்கை டைவர்' நதி ஒடின்சன் இவருக்கு வயது33 ஆகும் 


இந்நிலையில் நதி ஒடின்சன், தாய்லாந்தின் பட்டாயாவில் உள்ள 29 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் மேற்பகுதியிலிருந்து பாராசூட்டுடன் கீழே டைவ் அடித்தார். அப்போது அவர் பாராசூட்டை விரிக்க முயன்றார்.ஆனால், எதிர்பாராதவிதமாக பாராசூட் விரியவே இல்லை. இதனால் மிக வேகமாக கீழே விழுந்த நதி ஒடின்சன் தரையில் மோதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட பாதுகாவலர்கள் செய்திக்குறிப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதில் “ஏதோ தரையில் விழுந்தது போன்றும் , பலத்த சப்தமும் கேட்டது. உடனடியாக அங்கு ஓடிச்சென்று பார்த்தபோது, ஒரு பெண் அழுது கொண்டிருந்தார். அப்போதுதான் நதி ஒடின்சன் கீழே விழுந்தது தெரிய வந்தது" எனத் தெரிவித்துள்ளனர்.

வைரல் வீடியோ பார்க்க:- இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/unlimited_ls/status/1751819034792792410

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback