Breaking News

தமிழகம் முழுவதும் ஜனவரி 26 ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு.

அட்மின் மீடியா
0

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜனவரி-26 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு.

கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தக்கூடாது. கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிடுள்ள அறிக்கையில், 

குடியரசு தினத்தன்று (26.01.2024) அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி குடியரசு தினத்தன்று காலை 11.00 மணி அளவில் நடத்த வேண்டும். குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

வருகின்ற 26ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback