Breaking News

விஸ்டெக்ஸ் நிறுவன 25 ம் ஆண்டு வெற்றி விழா கொண்டத்தில் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த சி இ ஓ உயிரிழப்பு வைரல் வீடியோ Vistex Asia CEO last video

அட்மின் மீடியா
0

Vistex Asia CEO last video விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ சஞ்சய் ஷா உயிரிழந்துள்ளார். 

விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் CEO ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில், அந்நிறுவனத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது விழாவின் போது இரும்பு கூண்டின் செயின் அறுந்து இருபது அடி உயரத்தில் இருந்து தரையில் விழுந்து உயிரிழந்தார்

விஸ்டெக்ஸ் நிறுவனம் Vistex என்பது ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 1999ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனமாகும். 2,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது. விஸ்டெக்ஸ் ஆசியா பசிபிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சஞ்சய் ஷா அவர்கள் உள்ளார் இந்நிலையில் விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் கடந்த கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.

 


விழா ஏற்பாட்டில் சி.இ.ஓ சஞ்சய் ஷா மற்றும் விஸ்டெக்ஸ் நிறுவன தலைவர் விஸ்வநாத் ராஜு தட்லா ஆகியோரை ஏற்றிச் சென்ற இரும்புக் கூண்டில் ஏற்றப்பட்டு, சுமார் 20 அடி உயரத்தில் தொங்க வைக்கப்பட்டு இருந்தனர். 

அவர்கள் இருந்த கூண்டு கீழே மெதுவாக இறக்கப்பட்டது. அப்போது   இரும்புக் கூண்டு பாரம் தாங்காமல் திடீரென அறுந்துள்ளது. அதிலிருந்த சஞ்சய் ஷா மற்றும் ராஜு ஆகியோர் அந்த உயரத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் சிகிச்சை பலனின்றி சஞ்சய் ஷா உயிரிழந்துள்ளார். ராஜுவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அவர்கள் இறுதியாக அந்த கூண்டில் இருந்து கீழே விழுந்த அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது

வீடியோ பார்க்க:- இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/YourBuddy1129/status/1748609524687417416 

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback