Breaking News

காங்கிரஸ் போட்டியிடும் 21 விருப்ப தொகுதி பட்டியல் திமுகவிடம் கொடுக்கப்பட்டதா? காங்கிரஸ் கட்சி விளக்கம்

அட்மின் மீடியா
0

காங்கிரஸ் போட்டியிடும் 21 விருப்ப தொகுதி பட்டியல் திமுகவிடம் கொடுக்கப்பட்டதா? காங்கிரஸ் கட்சி விளக்கம்


எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.அதே போல காங்கிரசில் தேசிய அளவில் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவும், தமிழகத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையில் தேர்தல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று தொகுதி பங்கீடு குறித்து திமுக – காங்கிரஸ் கட்சிகள் இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, 

முதல்கட்ட ஆலோசனையில் இருதரப்பும் ஈடுபட்டது. கூட்டணியின் மற்ற கட்சிகளுடனான பேச்சுவார்த்தை குறித்த தேதியை அறிவிப்போம்” என்றார். 

காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை வழங்கப்பட்ட தொகுதிகளே மீண்டும் வழங்கப்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த டி.ஆர்.பாலு, 

இவ்வளவு சீக்கிரம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டால், அப்புறம் ஒன்றுமே இல்லையே. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை உள்ளது, அதன் பிறகுதான் தெரியும்” என்றார்.

                  

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும் போது, “டெல்லியிலிருந்து வந்த தலைவர்கள், திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தியளித்தது. ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்வது தொடர்பாகவும் பேசப்பட்டது என கூறினார்

மேலும் தி.மு.க.விடம் காங்கிரஸ் கேட்கும் 21 விருப்ப தொகுதிகள் பட்டியல் என்று பரபரப்பு தகவல்கள் வெளியானது.

இந்த பட்டியல் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவிடம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.ஆனால் இதனை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மறுத்துள்ளார். 

இதுதொடர்பாக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணாவும் தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் '2024 பாராளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி போட்டியிடும் இடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்களில் வெளி வந்துள்ளது. அதுபோல எந்த பட்டியலும் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை. கொடுக்கப்படவும் இல்லை' என்று கூறியுள்ளார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback