Breaking News

தமிழ்நாடு அரசின் 2024 ஆம் ஆண்டிற்கான கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது முகமது சுபைருக்கு வழங்கப்பட்டது

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அரசின் 2024 ஆம் ஆண்டிற்கான  கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த Alt News நிறுவனர் முகமது சுபைருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்


தமிழ்நாடு அரசிடம் இருந்து மத நல்லிணக்க விருதைப் |பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சி. அரசாங்கத்திடம் இருந்து எனக்கு விருது கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. குடியரசு தினத்தன்று அரசிடம் இருந்து இத்தகைய அங்கீகாரம் பெறுவது நெகிழ்ச்சி அடையச் செய்கிறது. தமிழ்நாடு அரசுக்கு நன்றி என  ஊடகவியலாளர் முகமது ஜூபேர் அவர்கள் தெரிவித்தார்

75வது குடியரசு தினத்தை ஒட்டி சென்னையில் ஆளுநர் ரவி தேசியக்கொடி ஏற்றினார் குடியரசு தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். அத்துடன் தமிழ்நாடு அரசின் சிறப்பு விருதுகளை வழங்கி கெளரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசுப் பள்ளிக்காக தனது நிலத்தை நன்கொடையாக வழங்கிய ஆயி அம்மாள், ஊடகவியலாளர் முகமது ஜூபேர் உள்ளிட்டோர் விருதுகளை பெற்றனர்

சமூக வலைதளங்களில் வரும் போலி செய்திகளை ஆய்வு செய்து வதந்திகள் பரவாமல் உண்மை செய்திகளை கண்டறிந்து வழங்கிவரும் ஆல்ட் நியூஸ் நிறுவனர் ஊடகவியலாளர் முகமது சுபைர் அவர்களுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருதை மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback