Breaking News

2023 ம் ஆண்டின் ஊழல் இல்லா நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்க்கு எந்த இடம் தெரியுமா முழு விவரம் corruption perceptions index 2023 india rank

அட்மின் மீடியா
0

உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் கொண்ட பட்டியலை அரசு சாரா அமைப்பான 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வரிசைப்படுத்துகிறது. 

ஜெர்மனியை தலைமையிடமாக கொண்ட  ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்கிற அரசுசாரா அமைப்பானது ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள 180 நாடுகளில் ஊழல் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஒவ்வொரு நாட்டிற்கு மதிப்பெண் வழங்குகிறது. 

நிர்வாக வெளிப்படைத்தன்மை, லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. இவற்றில்100-க்கு 100 மதிப்பெண்கள் பெறும் நாடு ஊழலற்ற நாடு என்ற வகையில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வழங்கப்படுகிறது. அந்த அமைப்பு வெளியிடும் ஊழல் குறியீடு பட்டியல் (CPI) மூலம் ஊழல் மிகுந்த நாடுகள், ஊழல் குறைந்த நாடுகள் எவை என வரிசைப்படுத்தப்படுகிறது



இதில் மதிப்பெண் குறைவாக பெறும் நாடு ஊழல் மிகுந்த நாடாக குறிப்பிடப்படுகிறது

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. 

மொத்தம் உள்ள 180 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது இதில்  90 மதிப்பெண் பெற்ற டென்மார்க் ஊழல் மிகவும் குறைந்த நாடாக முதலிடத்தை பிடித்துள்ளது. 87 மதிப்பெண்களுடன் பின்லாந்து 2-ம் இடத்தையும், 85 மதிப்பெண்களுடன் நியூசிலாந்து 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.84 மதிப்பெண்களுடன் நார்வே 4-ம் இடத்தையும்,83 மதிப்பெண்களுடன் சிங்கப்பூர் 5-ம் இடத்தையும் பிடித்துள்ளது

இந்த பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் வந்த ஒரே ஆசிய நாடாக சிங்கப்பூர் இருப்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

கடந்த ஆண்டு 85-வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 93-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. கடந்த ஆண்டு 40 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 39 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. 

இதேபோல் மாலதீவுகள், கஜகஸ்தான் மற்றும் லெசோதோ ஆகிய நாடுகளும் 39 மதிப்பெண்களுடன் இந்தியா தனது 93ஆவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது. முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டில், இதே பட்டியலில் இந்தியா 85ஆவது இடத்தை மாலதீவுகள் உட்பட மற்ற ஐந்து நாடுகளுடன் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல் ஊழல் மோசடிகளற்ற நாடுகளின் வரிசையில் இலங்கை 115ம் இடத்தை வகிக்கின்றது. ஊழல் மோசடிகளற்ற நாடுகள் தொடர்பிலான மதிப்பாய்வு புள்ளிகளாக இலங்கைக்கு 34 புள்ளிகள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளன

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் 133-வது இடத்தையும், இலங்கை 115-வது இடத்தையும் சீனா 76-வது இடத்தையும் பிடித்துள்ளன. 

அதிக ஊழல் கொண்ட நாடாகச் சோமாலியா இருக்கிறது. அந்த நாடு வெறும் 11 மார்க் மட்டுமே பெற்றுள்ளது. வெனிசுலா 2ஆவது இடத்திலும் சிரியா மூன்றாவது இடத்திலும் உள்ளது. தெற்கு சூடான், ஏமன், வடகொரியா ஆகியந நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது


முதல் 10 நாடுகளின் பட்டியல்

1. டென்மார்க் (90 புள்ளிகள்)

2. பின்லாந்து (87)

3. நியூசிலாந்து (85)

4. நார்வே (84)

5. சிங்கப்பூர் (83)

6. ஸ்வீடன் (82)

7. சுவிட்சர்லாந்து (82)

8. நெதர்லாந்து (79)

9. ஜெர்மனி (78)

10. லக்சம்பர்க் (78)

SOURCE:-

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback