Breaking News

கொடைக்கானல் அருவியில் குளித்த 2 பேர் சடலமாக மீட்பு! வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

கொடைக்கானல் அருவியில் குளித்த 2 பேர் சடலமாக மீட்பு! வீடியோ இணைப்பு

பொங்கல் விடுமுறைக்கு கொடைக்கானல் பேத்துபாறை பகுதியில் உள்ள அஞ்சு வீடு அருவியில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி மாயமான நசீர், கோகுல் ஆகிய 2 இளைஞர்களும் சடலமாக மீட்பு\

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் வசித்து வருபவர் நாசர். இவரது மகன் 21 வயது நசீர். ஆனந்தகிரி பகுதியில் வசித்து வருபவர் காா்த்திக் மகன் கோகுல் . நண்பா்களான இருவரும் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தனா். 


மேலும் பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக கோகுல். நதிர் மற்றும் இவர்களின் நண்பர்களுடன் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பேத்துப்பாறை அருகே உள்ள அஞ்சு வீடு அருவியில் குளிப்பதற்காக மதியம் 2 மணிக்கு மேல் சென்றதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் குளித்துக் கொண்டிருந்த பொழுது விளையாட்டு தனமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர் சென்றவர்கள் இருவரும் உள்ளே சிக்கி உள்ளனர்

இதை எடுத்து உடன் இருந்த அவரது நண்பர்கள் தனது நண்பர்கள் வெளியே வராத நிலையில் காவல்துறைக்கும் வனத்துறைக்கும் தகவல் அளித்தனர் 

தகவலின் பேரில் சம்பவ இடத்த்திற்கு விரைந்து வந்த காவல் மற்றும் தீயணைப்புத் துறையினா் மாணவா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். கொடைக்கானலில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதனைத் தொடா்ந்து மாயமான கல்லூரி மாணவா்களைத் தேடும் பணிநேற்று ஜனவரி 17ம் தேதி மீண்டும் தொடங்கும் என போலீசார் தெரிவித்தனர். 

இந்நிலையில் நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், சேத்துப்பாறையில் வசித்து வரும் கிராம மக்கள் தேடி வந்த நிலையில் நசீர், கோகுல் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இருவரும் அங்கு குளித்து கொண்டிருந்த போது இறுதியாக எடுக்கபட்ட வீடியோ தற்போது வைரல் ஆகின்றது

வீடியோ பார்க்க:- இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/cinnattampi/status/1747292337825333666

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback