ஏப்ரல் 16ஆம் தேதி இந்திய நாடாளுமன்ற தேர்தலா ? தேர்தல் ஆணையம் விளக்கம்
இந்தியாவின் 17ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்றறு வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக வெற்றி பெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு ஜூன் மாதம் மீண்டும் பதவியேற்றது. 17ஆவது மக்களவையின் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
தற்போது 18ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் பாஜகவும்,
இழந்த ஆட்சியை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சியும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் மொத்தம் 28 கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றார்கள்
இந்நிலையில் மக்களவை தேர்தல் 2024க்கான பூர்வாங்க பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்குத் தலைமைத் தேர்தல் ஆணையம் வரைவுத் திட்டத்தை வழங்கியுள்ளது. ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஏற்றவாறு தேர்தல் சார்ந்த பணிகளை வகுக்குமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்த நிலையில், ஏப்ரல் 16ஆம் தேதி மக்களவை தேர்தல் நடத்த உத்தேசித்துள்ளதாக வெளியான தகவல் குறித்து டெல்லி தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளை விரைவு படுத்தியுள்ளது.இதற்கிடையே, கடந்த ஒரு வாரமாக ஏப்ரல் 16-ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதாக வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தன.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் பரவும் செய்தி போலியானது என்றும், தேர்தல் அட்டவணையை செய்தியாளர்கள் சந்திப்பு மூலம் தேர்தல் ஆணையமே அறிவிக்கும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
தேர்தல் ஆணையத்தின் தேர்தல் திட்டமிடலின்படி, இந்த தேதியானது அதிகாரிகளின் செயல்பாடுகளைத் திட்டமிடுவதற்காக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என தெளிவுபடுத்தப்படுகிறது என தேர்தல் ஆணையம் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.
டிவிட்டர் பக்கத்தில் அளித்துள்ள விளக்கம்:-
https://twitter.com/CeodelhiOffice
CEO, Delhi Office @CeodelhiOffice Some media queries are coming referring to a circular by @CeodelhiOffice to clarify whether 16.04.2024 is tentative poll day for #LSElections2024 It is clarified that this date was mentioned only for ‘reference’for officials to plan activities as per Election Planner of ECI.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
