1500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப தமிழக அரசு அரசாணை முழு விவரம்
தமிழகத்தின் அரசு பள்ளிகளில் கூடுதலாக இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்று வருகிறது. இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.
தமிழக அரசு பள்ளிகளில் முன்னதாக 1,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டிருந்தது.தற்போது கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நிரப்புவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான வழிமுறைகள் விரைவில் கடைபிடிக்கப்பட்டு மொத்தம் 1,500 பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் விரைவில் நிரப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

