Breaking News

15 இந்திய மாலுமிகளுடன் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பல் -அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை வீரர்கள் - வைரலான லைவ் வீடியோ பார்க்க

அட்மின் மீடியா
0

சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்திய வணிகக் கப்பலை இந்திய கடற்படை கமாண்டோக்கள் மீட்டனர்

சிறை பிடித்த இந்தியாவைச் சேர்ந்த 15 கப்பல் பணியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்



சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் சென்ற வணிகக் கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது

கடத்தப்பட்ட வணிக கப்பலில் INS சென்னை போர்க்கப்பல் சோமாலிய கடற்கொள்ளையை தடுக்க Marine Commando வீரர்களை கப்பல் தளத்தில் களமிறக்கிய வீடியோ காட்சி.

 லிபேரியா நாட்டின் ‘எம்.வி. லீலா நார்ஃபோக்’ என்ற சரக்கு கப்பல், பிரேசில் நாட்டில் இருந்து பஹ்ரைனுக்கு சென்று கொண்டிருந்தது. அரபிக்கடல் பகுதியில் சோமாலியா கடற்கரை அருகே 300 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்றபோது, 

படகில் ஆயுதங்களுடன் வந்த 6 கொள்ளையர்கள் கப்பலுக்குள் ஏறினர். அந்த கப்பலில் இந்திய மாலுமிகள் 15 பேர் உட்பட 21 மாலுமிகள் இருந்தனர் இதையடுத்து கப்பல் கேப்டன்  உடனடியாக இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவித்தார்



இதையடுத்து அந்த சரக்கு கப்பலை மீட்க சம்பவ இடம் சென்ற  ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் கடற்கொள்ளையர்கலுக்கு எச்சரிக்கை கொடுத்தனர்

அதன்பின் போர்க்கப்பலில் இருந்து கடற்படையின் ‘மர்காஸ்’ கமாண்டோக்கள் ஹெலிகாப்டர் மூலம் சரக்கு கப்பலில் மேல் தளத்தில்  குதித்து, கொள்ளையர்களை தேடினர் ஆனால் கொள்ளயர்கள் இல்லைகப்பலில் இருந்த இந்திய மாலுமிகளை கடற்படை கமாண்டோக்கள் பாதுகாப்பாக மீட்டனர். 

இந்திய கடற்படையினர் விடுத்தஎச்சரிக்கையை அடுத்து, கடற்கொள்ளையர்கள் சரக்கு கப்பலைவிட்டு தப்பிவிட்டதாக தெரிகிறது. 

இந்நிலையில் இந்த சம்பவங்கள் அனைத்தும் லைவ் வீடியோ எடுத்த இந்திய கடற்படையினர் அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வைரல் ஆகின்றது வீடியோ பார்க்க 



https://twitter.com/indiannavy/status/1743286659880280527

வீடியோ பார்க்க 

https://twitter.com/Shailendra97S/status/1743288047553433955

வீடியோ பார்க்க 

https://twitter.com/SoumyaSourav99/status/1742929969431683507

வீடியோ பார்க்க 

https://twitter.com/MeghUpdates/status/1743530727189422492

வீடியோ பார்க்க:-

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback