Breaking News

மாலத்தீவில் உள்ள இந்திய இராணுவ வீரர்கள் மார்ச் 15-க்குள் வெளியேற வேண்டும் - மாலத்தீவு அதிபர் உத்தரவு!! President MMuizzuhas requested India to withdraw its troops from the Maldives by 15th March 2024

அட்மின் மீடியா
0

கடந்த வாரம் மாலத்தீவு சென்றிருந்த பிரதமர் மோடி ஆழ்கடல் பகுதியில் நீந்தி பவளப்பாறைகளை படம் பிடித்த வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. 

இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்த மோடி, லட்சத்தீவு வெறும் தீவுகளின் கூட்டமல்ல. காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரியமான மரபு மற்றும் மக்களுக்கான சான்று. கற்பதற்கும் வளர்வதற்குமான வாய்ப்பாக தனது பயணம் அமைந்தது.பிரமிக்க வைக்கும் லட்சத்தீவு அழகையும், அங்கு வாழும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பையும் கண்டு நான் பிரமிப்பில் உள்ளேன். அகத்தி, பங்காரம்,கரவட்டி ஆகிய இடங்களில் மக்களுடன் உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்களது உபசரிப்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார்.



இந்நிலையில் மாலத்தீவு அமைச்சர்களான மரியம் ஷியுனா, மால்ஷா ஷரீஃப், மசூம் மஜீத் ஆகியோர் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் மோடி லட்சத்தீவில் எடுத்த புகைப்படங்களை பகிரிந்து அவதூறு கருத்து தெரிவித்திருந்தனர்.

உயிர் காக்கும் உடை அணிந்த மோடி இஸ்ரேஸின் கைப்பாவை என மரியம் ஷியுனா கூறியிருந்தார்.

மேலும் மூன்று அமைச்சர்கள் கருத்துக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் மற்றும் முன்னாள் அமைச்சர் அப்துல்லா ஷாகித் ஆகியோர் கண்டம் தெரிவித்திருந்தனர். 

அதனை அடுத்து மாலத்தீவு அரசாங்கம், வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மரியம் ஷியுனா கூறிய இழிவான கருத்துகள் நிராகரிப்படுகிறது, அவை மாலத்தீவு அரசின் கருத்துகள் அல்ல என்று தெரிவித்திருந்தது

இந்நிலையில் கடந்த நவம்பரில் அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட பின்னர் முய்சு முதன்முறையாக சீனாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

இதுவரை மாலத்தீவு அதிபர் யாராக இருந்தாலும் பதவியேற்றதும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தருவதே வாடிக்கையாக இருந்தது.

தனது சீனபயனத்தை முடித்து மாலத்தீவு வந்த அதிபர் செய்தியாளர்களிடம் பேசுகையில்

மாலத்தீவு மிகச் சிறிய நாடாக இருந்தாலும் 9 லட்சம் சதுர கி.மீ அளவுக்கு, இந்தியப் பெருங்கடலில் பிரத்யேக பொருளாதார மண்டலத்தைக் கொண்டுள்ளோம், அதேபோல் நாங்கள் சிறிய நாடாக இருக்கலாம். அதுவே எங்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கான உரிமத்தை பிறருக்கு தந்துவிடாது'' என மறைமுகமாக இந்தியாவை சாடினார் மாலத்தீவு அதிபர்

இந்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் மார்ச் 15க்குள் அந்நாட்டை விட்டு வெளியேறியாக வேண்டும் என அவர் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிபர் அலுவலக பொது கொள்கை செயலாளர் அப்துல்லா நஜிம் இப்ராஹிம் கூறுகையில், "மாலத்தீவில் இந்திய ராணுவ வீரர்கள் இனி தங்க முடியாது. இது அதிபர் முகமது முய்ஸுவின் கொள்கை மற்றும் அரசு நிர்வாகத்தின் கொள்கை அடிப்படையிலான முடிவு" என்றார். மாலத்தீவில் சுமார் 90 இந்திய ராணுவ வீரர்கள் உள்ளனர்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback