மும்பை ராமர் ஊர்வலத்தில் கலவரம் வீடியோ இணைப்பு - 13 பேர் கைது - புல்டோசர் மூலம் கடைகள் வீடுகள் இடிப்பு
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி, நேற்று மும்பையில் ராமர் பக்தர்கள் ஸ்ரீராம் ஷோபா யாத்திரை என்ற பெயரில் வடக்கு ஆங்காங்கே ஊர்வலம் நடத்தினர்.
மும்பை அருகில் உள்ள மீரா ரோடு பகுதியில் இருக்கும் நயா நகரில் ஜெய் ஸ்ரீராம் என்று எழுதப்பட்ட கொடிகள் பறக்கவிடப்பட்டது மேலும் இந்து அமைப்புகள் ஊர்வலம் நடத்தினர்.
கார்கள், பைக்குகளில் காவிக் கொட்டி கட்டியபடி பலரும் பேரணியில் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது பேரணியில் இரு தரப்பினரும் மாறி மாறி கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர் ,அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டது.
அதில் சாலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் சேதம் அடைந்தன. இதையடுத்து நயா நகரில் போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும் போலீஸார் கொலை முயற்சி மற்றும் வன்முறை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து, 13 பேரை கைதுசெய்துள்ளனர்.
இதற்க்கிடையில் வன்முறையில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக நயா நகர் பகுதியில் புல்டோசர்கள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. 15 சட்டவிரோத கட்டுமானங்கள் இடிக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து மீரா ரோடு பகுதியில் சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்கும் பணி என்ற பெயரில் இன்று புல்டோசர் கொண்டு வரப்பட்டு சுமார் 15 கட்டுமானங்கள் தகர்க்கப்பட்டன.
சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் காவல்துறை விசாரணை தொடர்ந்து வருவதால், கைதுகள் மற்றும் புல்டோசர் நடவடிக்கைகள் மேலும் தொடரும் எனத் தெரிய வருகிறது.
வீடியோ பார்க்க :-
இங்கு கிளிக் செய்யவும்
இங்கு கிளிக் செய்யவும்
இங்கு கிளிக் செய்யவும்
இங்கு கிளிக் செய்யவும்
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்