காஞ்சிபுரத்தில் நாளை 11 பள்ளிகளுக்கு விடுமுறை! எந்த எந்த பள்ளிகள் முழு விவரம்
காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளைய தினம் காஞ்சிபுரத்தில் நாளை 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்ததால் அப்பகுதி பள்ளிகளுக்கு விடுப்பு விடப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஞ்சீபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு நாளை (01.02.2024) நடைபெறுவதை முன்னிட்டு இக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இக்கோவிலை சுற்றி மிக அருகாமையில் அமைந்துள்ள
1. எஸ்.எஸ்.கே.வி.பள்ளி,
2. அரசு கா.மு.சுப்பராய முதலியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
3.அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி பெரிய காஞ்சிபுரம்,
4.அந்திரசன் பள்ளி,
5.பச்சையப்பன் ஆடவர் மேல்நிலைப்பள்ளி,
6. ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி,
7. ராயல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
8. சி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளி,
9. எஸ்.எஸ்.கே.வி.பள்ளி நிறுவனத்திற்கு சொந்தமான மேலும் இரு பள்ளிகள்,
10.ஒ.பி.குளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி,
11. அரசு கா.மு.சுப்பராயமுதலியார் தொடக்கப் பள்ளி
ஆகிய பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மேற்படி பள்ளிகளுக்கு நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
