கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த புதிதாக 323 பணியிடங்கள் தமிழக அரசு அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது!
தமிழ்நாடு அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள அரசாணையில் புதிய பணியிடங்களை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த செப். மாதம் முதல் ஒரு கோடி மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்காக மேலும் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு மகளிர் உரிமை திட்ட பயனாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்
பணியிடங்கள்:-
புதிய வட்டங்களில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் – 8
ஆட்சியர் அலுவலங்களில் தலா ஒரு துணை வட்டாச்சியர் – 38
வருவாய் கோட்ட அளவில் தலா ஒரு துணை வட்டாட்சியர் – 94
மக்கள் அதிகம் உள்ள மாநகராட்சிகளில் துணை வட்டாட்சியர் – 53
மலை தொலை தூர பகுதிகளில் துணை வட்டாச்சியர் – 32
மண்டல துணை வட்டாச்சியர் இல்லாத இடங்கள் – 7
அதிக பயனாளிகள் உள்ள வட்டங்களில் துணை வட்டாட்சியர்கள் – 91
Tags: தமிழக செய்திகள்
