பொங்கல் பரிசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
பொங்கல் பரிசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ₹1,000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட, ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்துவோர். பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர். சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்.
மேலும் பொங்கலை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்றும் அறிவித்துருந்தார்
இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நிபந்தனையின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
