Breaking News

பொங்கல் பரிசுத்தொகை 1000 ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும் யாருக்கெல்லாம் கிடைக்காது முழு விவரம்

அட்மின் மீடியா
0
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ₹1000 ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு  
 
 
பொங்கல் பரிசுத்தொகை 1000 ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும் யாருக்கெல்லாம் கிடைக்காது


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும்” - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். இந்த நன்னாள் அனைத்துத் தொழில்களுக்கும். ஏன். மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2-1-2024 அன்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து. இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட, ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்துவோர். பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர். சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
 
மேலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம்
பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும் 10 ஆம் தேதியன்றே, மகளிர்உரிமைத் தொகை பெற்றுவரும் 1 கோடியே 15 இலட்சம் மகளிரின் வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.
 
பொங்கல் பரிசுத்தொகை 1000 ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும் யாருக்கெல்லாம் கிடைக்காது 
 
பொங்கல் பரிசாக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் எனவும், விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படும் எனவும் இவற்றை ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
யாருக்கெல்லாம் கிடைக்காது:-
 
சர்க்கரை அட்டைதாரர்கள், 
 
பொருளில்லா இல்லா அட்டைதாரர்கள், 
 
ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் 
 
வருமான வரி செலுத்துவோர். 
 
பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர். 
 
தவிர அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும்.
 
பொங்கலுக்கு வழங்கப்படும் 1000 ரூபாய் மத்திய, மாநில அரசு பணியாளர்களுக்கு கிடையாது.
 
வருமான வரி செலுத்துபவர்களுக்கு 1000 ரூபாய் கிடையாது.
 
பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு 1000 ரூபாய் கிடையாது.
 
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் கிடையாது
 
பொருளில்லா அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 கிடையாது.
 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback