தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க தமிழக அரசு திட்டம் விரைவில் வரும் அறிவிப்பு
தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க தமிழக அரசு திட்டம் விரைவில் வரும் அறிவிப்பு
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2024ஆம் ஆண்டு தை பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்குவது தமிழக அரசின் வழக்கமாகும்
இத்தொகுப்பில் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி ,வெல்லம் ,முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும் , பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் ,கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு ,உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவை பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்படும்.
இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு, கடந்தாண்டு போல ரூ.1,000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு போன்றவை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி