பிப்ரவரி 1 முதல் அமலாகும் மாற்றங்கள் என்ன என்ன முழு விவரம் from february 1
பிப்ரவரி 1ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சில குறிப்பிட்ட மாற்றங்களை மத்திய அரசு செய்து வருகிறது. நாளை முதல் மாறப்போகும் சில முக்கிய அம்சங்களை இங்கு பட்டியல் இட்டுள்ளோம்
சிலிண்டர் விலை உயர்வு:-
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. மாதத்தின் முதல் நாளில் காஸ் சிலிண்டர் விலை மாறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றங்கள் தொடர்ந்து காணப்படுகின்றன.
கடந்த அக்டோபர் மாதம் கடைகளில் விற்கப்படும் ரூ.1,695க்கு விற்ற சிலிண்டர், ரூ. 1,898-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர் மாற்றமின்றி, ரூ. 1068க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் பிப்ரவரி மாதம் பட்ஜெட்டுக்கு பின் சிலிண்டர் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SGBன் தங்க பத்திர முதலீடு:-
நீங்கள் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்ய விரும்பினால், இந்திய ரிசர்வ் வங்கி உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை மீண்டும் கொண்டு வருகிறது. நீங்கள் SGB 2023-24 தொடர் IVல் 12 பிப்ரவரி முதல் 16 பிப்ரவரி 2024 வரை முதலீடு செய்யலாம்.
காசோலைக் கட்டணம்:-
காசோலை செலுத்துவதற்கான புதிய விதிகளையும் பேங்க் ஆஃப் பரோடா வங்கி அமல்படுத்த உள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் நேர்மறை பேமெண்ட் முறையைப் பின்பற்றுவது கட்டாயமாகும். புதிய விதிகள் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள காசோலைகளுக்கு மட்டும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
NPS கணக்கில் இருந்து பணம் எடுக்க:-
திய விதியின்படி, என்பிஎஸ் கணக்கு வைத்திருப்பவர் மொத்த டெபாசிட் தொகையில் 25 சதவீதத்திற்கு மேல் எடுக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் NPS கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான விதிகளில் PFRDA ஒரு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. ஜனவரி 12, 2024 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இப்போது NPS கணக்கு வைத்திருப்பவர்கள் மொத்த டெபாசிட் தொகையில் 25 சதவிகிதத்தை மட்டுமே எடுக்க முடியும். மேலும், திரும்பப்பெறுவதற்கு, கணக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் இருந்திருக்க வேண்டும்.
FAST KYC
FASTagல் ஜனவரி 31ம் தேதிக்குள் KYC முடிக்கப்படாத வாகனங்கள் செயலிழக்கச் செய்யப்படும். ஒரு வாகனத்திற்கு. இனிமேல் ஒரு FasTagகள் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.அதேபோல் ஒரே பாஸ்ட் டாக்கை ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் பயன்படுத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படி பயன்படுத்தப்படும் பழைய பாஸ்ட் டாக்குகள் ஜனவரி 31க்குப் பிறகு செயலிழக்கச் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பான்கார்டு :-
விரைவில் நாடு முழுக்க பாண் கார்டு வழங்குவதில் பெரிய கட்டுப்பாடு கொண்டு வர மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
அதன்படி இனி பான் கார்டுகளை முறையாக அனுமதி பெற்று மட்டுமே விண்ணப்பிக்க செய்ய வசதியாக விரைவில் நாடு முழுக்க பாண் கார்டு வழங்குவதில் பெரிய கட்டுப்பாடு கொண்டு வர மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாம்.
பல தனியார் நிறுவங்களிடம் இருந்து பான் விண்ணப்பிக்கும் அனுமதியை எடுத்து ஆதார் அட்டை போல இனி பான் அட்டைகளையும் முறையாக விண்ணப்பிக்க சென்டர்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.
கிரெடிட் கார்டு:-
பேங்க் ஆஃப் பரோடா வங்கியின்கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தினால் ஒரு சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த விதி அமலுக்கு வருகிறது.
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

