Breaking News

1 முறை சார்ஜ் செய்தால் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் நியூகிளியர் பேட்டரியை கண்டுபிடித்த சீனா! nuclear battery 50 years without charging

அட்மின் மீடியா
0

1 முறை சார்ஜ் செய்தால் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் நியூகிளியர் பேட்டரியை கண்டுபிடித்த சீனா!

nuclear battery 50 years without charging

ஒருமுறை சார்ஜ் செய்தால், 50 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய நியூக்ளியர் பேட்டரியை சீன ஸ்டார்ட் அப் நிறுவனமான பீட்டாவோல்ட் உருவாக்கி உள்ளது.

63 ஐசோடோப்புகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நியூக்ளியர் பேட்டரி சிறிய நாணயம் அளவுக்கு மட்டுமே இருக்கும். ஏற்கெனவே செல்ஃபோன் மற்றும் ட்ரோன்களில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ள இந்த பேட்டரி, விரைவில் வணிகரீதியாக சந்தைக்கு வர இருப்பதாக பீட்டாவோல்ட் அறிவித்துள்ளது

மேலும் வழக்கமான லித்தியம் பேட்டரிகளை விட 10 மடங்கு அதிக ஆற்றல் அடர்த்தியை நியூகிளியர்  பேட்டரி கொண்டுள்ளது எனவும் 3300 மெகாவாட் மணிநேரம் வரையிலான ஆற்றலை இந்த பேட்டரியால் சேமித்து வைத்துக்கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்டத்தில் இருக்கும் இந்த பேட்டரி எதிர்காலத்தில் ஸ்மார்ட்போனை இயக்கக் கூடிய வகையில் உருவாக்கப்படும் என  Betavolt நிறுவனம் கூறியுள்ளது.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback