Breaking News

கனமழை காரணமாக இன்று 09.01.2024 பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம் school leave

அட்மின் மீடியா
0

வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது, இதனால் தென்தமிழக உள் மாவட்டங்களில் மிகத்தீவிரமாக உள்ளது. தென்தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. இந்நிலையில் 

09.01.2024 அன்று: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை கனமழை பெய்யக்கூடும்.

கன மழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜனவரி 08ம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்! 

பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பு:-   

வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகள் விடுமுறை அளித்தால் இங்கு அப்டேட் செய்யப்படும் சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்க்கவும்:-

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback