Breaking News

உடன் பிறந்த சகோதரனுக்கு கிட்னி தானம் செய்த மனைவி வாட்ஸ்ஆப்பில் முத்தலாக் கூறிய கணவர் triple talaq on WhatsApp

அட்மின் மீடியா
0

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோன்டா மாவட்டத்தில் உள்ள பைரியாஹி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத் (44) . இவருக்கு குல்சைபா (40) என்ற பெண்ணுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அப்துல் ரஷீத் சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். 

உடன் பிறந்த சகோதரனுக்கு கிட்னி தானம் செய்த மனைவி வாட்ஸ்ஆப்பில் முத்தலாக் கூறிய கணவர்

இந்த நிலையில் குல்சைபா சகோதரனுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அவரை காண தாய் வீட்டிட்ற்க்கு சென்ற குல்சைபாவிற்க்கு அங்கு தனது சகோதரனுக்கு கிட்னி செயல் இழந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் தனது சகோதரனின் உயிரைக் காப்பாற்ற குல்சைபா தனது சிறுநீரகங்களில் ஒன்றைத் தானம் செய்துள்ளார். அதன்பின் மாமியார் வீட்டிற்கு அவர் திரும்பினார்.

அப்போது சிறுநீரகத்தை தானமாக வழங்கியது தொடர்பாக மாமியாருக்கும் மருமகளுக்கும் கடும் வாக்குவாதம் ஆனது யாரை கேட்டு உனது கிட்னியை தானம் செய்தாய் இதற்கு இழப்பீடாக குடும்பத்தாரிடம் இருந்து, 40 லட்சம் ரூபாய் வாங்கி வரும்படி கேட்டு உள்ளார் இதற்கு அவர் மறுத்துள்ளார், மாமியார் அவரை வீட்டில் இருந்து வெளியே துரத்தியுள்ளார்

இந்த விஷயம் குறித்து கேள்விப்பட்ட அவரது கணவர் வாட்ஸப் வீடியோகாலில் குல்சைபாவிடம் அதுசம்பந்தமாக விசாரித்துள்ளார். அவரும், நடந்ததைக் கூறியுள்ளார். அவரும் கிட்னியை கொடுத்தற்க்கு இழப்பீடாக குடும்பத்தாரிடம் இருந்து, 40 லட்சம் ரூபாய் வாங்கி வா இல்லையானல் உனது வீட்டிற்க்கே சென்றுவிடு என கூறை வாட்ஸ்அப்பிலேயே அவருக்கு மூன்று முறை ‘தலாக்’ எனக் கூறி விவாகரத்து அளித்துள்ளார். 

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான குல்சைபா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார்  பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019, வரதட்சணை தடை சட்டம் மற்றும் IPC இன் பிற பிரிவுகளுடன் அப்துல் மீது வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

இந்தியாவில் முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று அறிவிக்கப்பட்டது, 2019 சட்டம் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்குகிறது.

News Source:-

https://www.udayavani.com/english-news/up-woman-refuses-to-charge-brother-for-kidney-donation-husband-pronounces-triple-talaq-over-phone

முத்தல்லாக்:-

இஸ்லாத்தில் இல்லாத ஓர் நடைமுறை இந்த முத்தலாக் ஆகும். அதாவது முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஆண்கள், மூன்று முறை தலாக் கூறி, மனைவியை விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக, மத்திய அரசு சட்டத் திருத்தம் மேற்கொண்டது. இதையடுத்து, முத்தலாக் தடை சட்டம் அமலுக்கு வந்தது. அதையும் மீறி, முத்தலாக் வாயிலாக விவாகரத்து பெறுபவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback