Breaking News

SMS Link மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகம் செய்த மின் வாரியம் வழிமுறைகள் இதோ

அட்மின் மீடியா
0

தமிழக அரசு மின்வாரிய மின்கட்டணத்தை நாம் பல்வேறு வழிகளில் கட்டலாம், அதில் நாம் பேடிஎம், கூகுள்பே, போன்பே, மூலமும் தமிழக மின் வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் நாம் மின் கட்டணத்தை கட்டலாம்

இந்நிலையில் தற்போது மின் வாரிய பயணாளிகள் பயன்பெறும் வகையில் SMS Link வழியாக மின்கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது  தமிழ்நாடு மின்சார வாரியம்.

 

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ TANGEDCO விலுருந்து வரும் அதிகாரபூர்வ குறுஞ்செய்தியிலேயே யுபிஐ, இணைய வங்கி வாயிலாக மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்து தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

இப்போது உங்களுக்கு TANGEDCO விலுருந்து வரும் அதிகாரபூர்வ குறுஞ்செய்தியிலேயே, யுபிஐ, இணைய வங்கி வாயிலாக மின் கட்டணம் செலுத்தலாம் இன்னும் எளிதாக

Step-1 குறுஞ்செய்தி இணைப்பைக் கிளிக் செய்யவும் (Click on the SMS link)

Step-2 கீழே உள்ள பெட்டியில் எண்ணை(captcha) உள்ளிடவும் (Enter the number in the box below)

Step-3 கட்டணம் செலுத்தும் செயல்முறையைத் தொடங்க "PAYMENT OPTIONS" கிளிக் செய்யவும். அடுத்து நீங்கள் பண பரிவர்த்தனை செய்யுங்கள் (Click on the "PAYMENT OPTIONS" button to initiate the payment process. You will be redirected to a secure payment gateway for the transaction) 

மின் வாரிய அறிவிப்பை பார்க்க:-

கிளிக்

https://twitter.com/TANGEDCO_Offcl/status/1739958327638196688




 

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback