Breaking News

அல் ரவ்ழா அல் ஷரீஃபாவிற்கு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அனுமதி சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் saudi arabia allows visiting al rawdah al sharifa in madinah only once a year

அட்மின் மீடியா
0
சவூதிஅரேபியாவில் உள்ள மதினாவில் உள்ள அல் ரவ்ழா அல் ஷரீஃபாவிற்கு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பார்வையிடவும் பிராத்தனை செய்யவும் வருகை தரலாம் என சவூதி அரசாங்கம் அறிவித்துள்ளது.



அல் ரவ்ழா அல் ஷரீஃபா சவூதி அரேபியாவின் மதீனாவில் உள்ள மஸ்ஜிதுன் நபி பள்ளிவாசலில்  உள்ளது.

இஸ்லாத்தின் இரண்டாவது புனிதத் தலமான நபிகள் நாயகத்தின் மசூதியில் உள்ள அல் ரவ்ழா அல் ஷரீஃபாவிற்கு வருடத்திற்கு ஒருமுறை முஸ்லிம்கள் வருகை தரலாம் என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.


ஒவ்வொரு 365 நாட்களுக்கும் புனிதமான இடத்திற்கு வருகை அனுமதி வழங்கப்படும் என்று சவூதி அரசாங்க ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது

அதாவது ஒரு பயனாளி தனது கடைசி அனுமதியிலிருந்து 365 நாட்களுக்குப் பிறகு அல் ரவ்ழா அல் ஷரீஃபாவுக்கான அனுமதியைப் பதிவு செய்யலாம் என்று அமைச்சகம் கூறியது.

அங்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கல்லறை உள்ளது.அல் ரவ்ழா அல் ஷரீஃபாவிற்குச் சென்று பிரார்த்தனை செய்ய விரும்புவோர்  தங்கள் வருகைக்கு முன் அதிகாரப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும் எனவும் நுசுக் அல்லது தவக்ல்னா பயன்பாடுகள் மூலம் வருகை அனுமதியை மின்னணு முறையில் வழங்க வேண்டும் என்றும் அமைச்சகம் சுட்டிக்காட்டியது.

மக்காவில் உள்ள இஸ்லாத்தின் புனித தளமான மக்கா மசூதியில் உம்ரா  புனித யாத்திரையை மேற்கொண்ட பிறகு, பல யாத்ரீகர்கள் நபியின் மசூதிக்கு சென்று பிரார்த்தனை மற்றும் அல் ரவ்ழா அல் ஷரீஃபாவைப் பார்வையிட்டு  பிராத்தனைகள் செய்வார்கள்.

இது சொர்க்க தோட்டங்களில் இருந்து ஒரு பகுதி என்று நபி அவர்களால் சொல்லப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் மதினா நகரில் உள்ள பள்ளிவாசல் மஸ்ஜிதுன்நபவி (Al-Masjid al-Nabawi (அரபு மொழி: المسجد النبوي‎, நபியின் பள்ளிவாசல்). இது முகமது நபி அவர்களால் கட்டப்பட்டது. இது முஸ்லிம்களின் இரண்டாவது புனிதத் தலமாகும் (முதலாவது மஸ்ஜிதுல் ஹராம் மக்கா மூன்றாவது மஸ்ஜிதுல் அக்ஸா ஃபலஸ்தீனில் உள்ள பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசல் ஆகும்.

மதினாவில் உள்ள மஸ்ஜித்துல் நபவி இங்கு தான் முதன்முதலில் நபி ஸல் அவர்கள் கட்டிய பள்ளி உள்ளது, மேலும் இங்கு அபுபக்கர் , மற்றும் உமர் ஆகியோரின் அடக்கஸ்தலமும், அன்னை ஆயிஷா அவர்களின் இல்லமும் உள்ளது.

Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback