கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து எந்தெந்த பேருந்துகள் புறப்படும் முழு விவரம் Kilambakkam Bus Terminus
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து எந்தெந்த பேருந்துகள் புறப்படும் முழு விவரம்
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து SETC மற்றும் தனியார் பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள் அட்டவணை:-
விழுப்புரம் கோட்டம்
விழுப்புரம், திண்டிவனம், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, புதுச்சேரி, விருதாச்சலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி
சேலம் கோட்டம்
ஆத்தூர், ஓமலூர், நாமக்கல், சேலம்
கோயம்புத்தூர் கோட்டம்
கோயம்புத்தூர், ஈரோடு, குன்னூர், ஊட்டி,
கும்பகோணம் கோட்டம்
திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, கும்பகோணம், தஞ்சாவூர்
திருநெல்வேலி கோட்டம்
திருச்செந்தூர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி
சென்னை கோயம்பேட்டில் உள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் போக்குவரத்தால் கடும் நெரிசல் ஏற்படுகின்றது .இதனை குறைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள ஊரப்பாகம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிளாம்பாக்கத்தில் மிக பிரம்மாண்ட பேருந்து நிலைய பணிகள் கடந்த 2019 ல் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது .
இந்நிலையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை நாளை
டிச.30 ம்தேதி திறந்து வைத்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவர்கள்
மிகபிரமாண்டமான கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, ஏடிஎம் மையங்கள், காவல் கட்டுப்பாட்டு அறைகள், போக்குவரத்து அலுவகலகங்கள் உள்ளிட்டவை உள்ளன. தனியாக காவல் நிலையமும் உள்ளது
தென்மாவட்ட மக்களுக்கான பேருந்துகள் புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வரை 5 நிமிடத்துக்கு ஒரு மாநகரப் பேருந்து இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை பேருந்து செயலி டவுன்லோடு செய்து பேருந்து வருவதை தெரிந்துகொள்ளலாம்
கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு 70V, 70C, 104CCT பேருந்து 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரத்துக்கு 55V, M18 எண் கொண்ட பேருந்து 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்
கிளாம்பாக்கத்தில் இருந்து வேளச்சேரிக்கு 91R எண் கொண்ட பேருந்து 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
கிளாம்பாக்கத்தில் இருந்து கிண்டிக்கு 18ACT எண் கொண்ட பேருந்து 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்
கிளாம்பாக்கத்தில் இருந்து திருவான்மியூருக்கு 95X எண் கொண்ட பேருந்து 8 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
கிளாம்பாக்கத்தில் இருந்து அடையாறு இடையே 99X எண் கொண்ட பேருந்து 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
கிளாம்பாக்கத்தில் இருந்து பிராட்வே இடையே 21G எண் கொண்ட பேருந்து 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-
கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய திறப்பு விழாவிற்கு பிறகு மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து தெரிவித்தது:
கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” இன்றைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
மிகப்பெரிய பேருந்து முனையமாக இந்த பேருந்து முனையம் அனைத்து வசதிகளுடன் சிஎம்டிஏ-வால் அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே, சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கிய பேருந்துகள் இனி எந்தந்த வகையில் இங்கிருந்து இயங்கும் என்பதை இந்த நேரத்திலே உங்களிடத்திலே எடுத்துக்கூற விரும்புகிறேன்.
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை இன்றைக்கு கோயம்பேட்டிலிருந்து இயங்குகின்ற பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து தெற்கு பகுதிக்கு செல்லும். பெங்களூர், கிழக்கு கடற்கரை சாலைகளுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயங்கும்.
அதேபோல தென் தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற பேருந்துகள் அத்தனையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் முதல் பேருந்து நாளை காலை 4 மணி அளவிலே கோயம்பேட்டிற்கு வரும். அதற்குப் பிறகு வருகின்ற அத்தனை பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தான் வரும். கோயம்பேட்டிற்கு செல்லாது. எனவே, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை முழுமையாக நாளையிலிருந்து கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயங்கும்.
சாதாரண நாட்களில் 300 புறப்பாடுகளும், வார இறுதி நாட்களில் 360புறப்பாடுகள் கொண்ட அரசு விரைவு போக்குவரத்து கழகத்தினுடையபேருந்துகள் அத்தனையும் கிளாம்பாக்கத்திலிருந்து இயங்கும்.
அதேபோல, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் டிசம்பர் 31-ஆம் தேதி காலையிலிருந்து சென்னையின் எல்லா பகுதிகளுக்கும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும். ஏற்கனவே உள்ள வழித்தடத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிற பேருந்துகளை தாண்டி, கூடுதலாகவும் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.
மாநகர போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இங்கிருந்து (கிளாம்பாக்கம்) 270 நடைகள் இயக்கப்படும். ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்லும்.
அதேபோல தாம்பரம் செல்கின்ற பேருந்துகள் 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து கிளாம்பாக்கத்திலிருந்து தாம்பரத்திற்கு புறப்படும். இங்கிருந்து (கிளாம்பாக்கம்) கிண்டிக்கு செல்லும் மாநகர போக்குவரத்து பேருந்துகள் மூன்று நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்று இயக்கப்படும். ஏற்கனவே இந்த வழித்தடத்தில் 2386 நடை பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது கூடுதலாக 1691 நடை பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. எனவே, மொத்தம் 4077 நடைகள் கிளாம்பாக்கத்தின் இந்த வழித்தடத்திலே இயக்கப்படும்.
அதேபோல, இந்த அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அல்லாத மற்ற ஆறு போக்குவரத்து கழகங்கள் - விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய ஆறு அரசு போக்குவரத்து கழகங்களுடைய பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் வந்து அந்தந்த வழித்தடத்தில் இயங்கும். பொங்கல் வரை இந்த நிலை நீடிக்கும்.
பொங்கலுக்கு பிறகு அந்த அத்தனை பேருந்துகளும்கிளாம்பாக்கத்திலிருந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும். 1140 புறப்பாடுகள் பொங்கல் வரை கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும்.
அதேபோல ஆம்னி பேருந்துகள் இன்றைக்கு கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தங்களுடைய செயல்பாட்டினை தொடங்கிவிட்டார்கள். ஏற்கனவே அவர்களுக்கு டிக்கெட் புக்கிங் ஆகியுள்ளதன் காரணத்தால், பொங்கல் வரை சென்னை நகரத்திலிருந்து இயக்கப்படும். பொங்கலுக்கு பிறகு முழுமையாக கிளாம்பாக்கத்திலிருந்து அந்த ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்.
எனவே, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை நாளையிலிருந்தே முழுமையான செயல்பாடு இங்கிருந்து தொடங்கும். மாநகர போக்குவரத்து கழகம் நாளை காலையிலிருந்து இங்கிருந்து சென்னை மாநகரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படும். அரசு போக்குவரத்து கழகத்தின் மற்ற ஆறு போக்குவரத்து கழகங்கள் பொங்கல் வரை கிளாம்பாக்கம் வழியாக செல்பவை. பொங்கலுக்கு பிறகு முழுமையாக கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும். அதேபோல ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து முழுமையாக இயக்கப்படும்.
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
Tags: தமிழக செய்திகள்

