karnataka protest கன்னடத்தில் பெயர் பலகை வைக்காத கடைகள் அடித்து உடைப்பு! பெங்களூரில் பரபரப்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு
karnataka protest கன்னடத்தில் பெயர் பலகை வைக்காத கடைகள் அடித்து உடைப்பு! பெங்களூரில் பரபரப்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு
கர்நாடகாவில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள பெயர்கள் கன்னடத்தில் தான் இருக்க வேண்டும் என்றும் பெங்களூரு மாநகராட்சி தெரிவித்திருந்தது மேலும் இதற்கு பிப்ரவரி 28-ந் தேதி வரை கால அவகாசமும் கொடுக்கப்பட்டிருந்தது,அப்படி கன்னட மொழியில் பெயர் பலகைகள் இல்லாத வர்த்தக நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என திட்டவட்டமாக அறிவித்தது
இந்நிலையில் கர்நாடகா வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகள் கன்னட மொழியில்தான் இருக்க வேண்டும் என கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பு இன்று போராட்டத்தை நடத்தியது
அப்போது கன்னட மொழியில் பெயர்
பலகைகள் இல்லாத வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்களின் பெயர் பலகைகளை அடித்து
தூக்கி எறிந்தனர். சிலர் அந்த அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
போராட்டத்தில் சிலர் ஆவேசமடைந்து ஆங்கிலம் மற்றும் இந்தியில் பெயர் பலகை வைத்துள்ள கடைகளையும் அந்த பெயர் பலகை களையும் கன்னட அமைப்பினர் அடித்து உடைத்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்கள் சிலரை கைது செய்தனர் இதனால் பெங்களூரு நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கன்னடத்தில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல்..!!
போராட்டம் தொடர்பான வீடியோக்கள் பார்க்க:-
https://twitter.com/Netaji_bond_/status/1739920064986370233
https://twitter.com/thehawkeyex/status/1740001016018620442
https://twitter.com/riseupforrights/status/1739933196261965916
https://twitter.com/IndVenugopal/status/1739971975911493785
https://twitter.com/harishupadhya/status/1739966333260050878
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்