Breaking News

கா்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம் முதல்வர் சித்தராமையா அறிவிப்பு Karnataka govt to withdraw hijab ban

அட்மின் மீடியா
0

கர்நாடகாவில் ஹிஜாப் தடை உத்தரவை திரும்ப பெறுவதாக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்

கர்நாடக அரசுப் பள்ளியில் கடந்தாண்டு ஹிஜாப் அணிந்த முஸ்லிம் மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால் மாநிலம் முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. 

இதனிடையே, சில மாணவர்கள் காவித் துண்டு அணிந்து வந்து ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து, கல்வி நிறுவனங்களில் சீருடையை தவிர பிற ஆடைகள் அணியக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மாணவிகள், கல்வி நிறுவனங்களில் இருக்கும் சீருடைகளை மட்டுமே அணிந்துகொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.

கர்நாடகத்தில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் சித்தராமையா, கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாணவிகள் ஹிஜாப் அணியலாம் என்று முடிவெடுக்கப்பட்டது

ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதும் விவகாரத்தில் சிலர் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்த முயல்கிறார்கள்.. இந்த விவகாரத்தில் சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்.இப்போது அனைத்து தரப்பினரின் சுதந்திரத்தையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்

இந்நிலையில் கா்நாடகத்தில் கல்வி நிலையங்களில் 'ஹிஜாப்' அணிவதற்கான தடை இன்று முதல் நீக்கப்படுவதாக மாநில முதல்வா் சித்தராமையா \ அறிவித்துள்ளார்

கா்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட 3 காவல் நிலையங்களின் திறப்பு விழாவில் அவா் பேசுகையில், 'அனைவருக்குமான அரசு எனக் கூறும் பாஜக தலையில் தொப்பி அணிவதற்கு, ஹிஜாப் அணிவதற்குத் தடை விதிக்கிறது. இதுதான் அனைவருக்குமான அரசா?' என்றாா்.

மேலும் நீங்கள் ஹிஜாப் அணிவதற்குத் தடை இல்லை. சனிக்கிழமை முதல் நீங்கள் ஹிஜாப் அணியலாம். பிடித்த உணவை உட்கொள்ளலாம். பிடித்த ஆடைகளை அணியலாம். ஜாதி மதவேறுபாடின்றி காங்கிரஸ் அரசு செயல்படுகிறது' என்றாா்.

கா்நாடகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு பாஜக ஆட்சி செய்தபோது கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது குறித்து தனது டிவிட்டர் தளத்தில்

PM@narendramodi's sab ka saath-sab ka vikas is bogus.@BJP4Indiais doing the work of dividing people and dividing society on the basis of clothes, dress, caste. I have told to withdraw the hijab ban.

டிவிட்டர் பதிவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback