Breaking News

Dr. Saveera Parkash பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை பிரதமர் வேட்பாளராக இந்து பெண் சவீரா பரகாஷ் வேட்பு மனு தாக்கல்

அட்மின் மீடியா
0

Dr. Saveera Parkash பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை பிரதமர் வேட்பாளராக இந்து பெண் சவீரா பிரகாஷ் வேட்பு மனு தாக்கல்

பாகிஸ்தானில் முதன்முறையாக ஹிந்து பிரதமர் வேட்பாளர். அடுத்த ஆண்டில் நடக்கவிருக்கும் பொது தேர்தலில் பிரதமர் வேட்பாளருக்கு டாக்டர் சவீரா பிரகாஷ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்



2024 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதி பாகிஸ்தான் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது  இந்நிலையில் பாகிஸ்தான் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக மருத்துவர் சவீரா பர்காஷ் என்ற இந்து பெண் ஒருவர், பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்

இந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என், இம்ரான் கான் தலைமையிலான தெக்ரீக்-இ-இன்சாப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

சவீரா பர்காஷ்

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வாவில் உள்ள புனர் மாவட்டத்தில் வசிக்கும்  சவீரா பர்காஷ் என்ற இந்துபெண் முதன்முறையாக பொதுத் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்

இவர் அபோதாபாத் சர்வதேச மருத்துவ கல்லூரியில் கடந்த ஆண்டு படிப்பை முடித்தார். 

இவரின் தந்தை கடந்த 35 வருடங்களாகப் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் உறுப்பினராக இருந்து வருகின்றார்

சவீரா பர்காஷ் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மகளிர் பிரிவின் பொதுச் செயலாளராக உள்ளார்

பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், முதல்முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Tags: அரசியல் செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback