ஜிபிஎஸ் மூலம் சுங்கக்கட்டணம் வசூல் மார்ச் மாதம் முதல் அமலுக்கு வரும் மத்திய அமைச்சர் அறிவிப்பு
தேசிய நெஞ்சாலைகளில் தற்போதுள்ள சுங்கச்சாவடிகளுக்கு மாற்றாக ஜிபிஎஸ் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை 2024 ம் ஆண்டு மாா்ச் மாதம் முதல் மத்திய அரசு அமல்படுத்தவுள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்
இதன் மூலம் வாகனங்களின் இயக்கத்தைப் பொறுத்து சுங்கக்கட்டணம் வாகன ஓட்டிகளின் வங்கிக்கணக்கில் இருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்ளப்படும் என கூறியுள்ளார்
நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ஜிபிஎஸ் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறை அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.வாகன பதிவு எண் பலகைகளை தானாக அங்கீகரிக்கும் கேமராக்கள் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வரும் என்றாா்.
நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு மக்கள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். sஉங்கசாவடிகளில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதால் FAST TAG முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் பயணிகள் சுங்கசாவடிகளில் காத்திருப்பு நேரம் மிகவும் குறைந்துள்ளது.
இந்நிலையில் 2024 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்க்குள் டோல்கேட் கட்டணம் வசூலிப்பில் புதிய முறைய மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டு வர உள்ளதாகவும் அதன்படி செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண முறையை அமல்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக, அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
