Breaking News

மெட்ரோவில் பயணம் செய்யுங்க பரிசு பொருட்களை அள்ளுங்க மெட்ரோ அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் நபர்கள் சிங்கார சென்னை அட்டைகளை பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு, 2024 மார்ச் 15ம் தேதி வரை 3 மாதங்கள் பரிசு பொருட்களை வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது அதன்படி ஒவ்வொரு மாதமும் சிங்கார 40 பயணிகளை தேர்வு செய்து பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளார்கள்

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு பரிசு பொருள்

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தற்போது 54.6 கி.மீ. நீளத்தில், நீல வழித்தடத்தில் விமான நிலையம் மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ வரை மற்றும் பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை மெட்ரோ இரயில் சேவைகளை வழங்கி வருகிறது. சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் தொடங்கியதில் இருந்து இதுநாள் வரை சுமார் 24 கோடி பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை மெட்ரோ இரயில்களில் சிங்கார சென்னை அட்டைகளை பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், 15.12.2023 முதல் 15.03.2024 வரை 3 மாதங்கள் என ஒவ்வொரு மாதமும் அதிகமாக பயணம் செய்யும் முதல் 40 பயணிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசு பொருள் வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல் மாதம் 15.12.2023 முதல் 14.01.2024  வரை

இரண்டாம் மாதம் 15.1.2024 முதல் 14.02.2024  வரை

மூன்றாம் மாதம் 15.2.2024 முதல் 14.03.2024  வரை

இதில் தேர்ந்தெடுக்கப்படும் பயணிகளுக்கு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி உடன் இணைந்து பரிசு பொருள்களை வழங்கும்.

பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும். பயணிகளை ஊக்குவிக்கவும் இவை வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback