Breaking News

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ் திரைப்பட நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த், நவம்பர் 18ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.வழக்கமான பரிசோதனைக்காகதான் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதலில் தகவல் வெளியானது.

ஆனால் கடந்த வாரம் மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் 

விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்றும் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்தது. அதுமட்டுமின்றி மேலும் 14 நாட்களுக்கு விஜயகாந்துக்கு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவமனை அறிக்கை தெரிவித்தது.

இததையடுத்து தேமுதிக தொண்டர்களும் ரசிகர்களும் விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என தெரிவித்து வந்தனர். 

மேலும் கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் அவர் கூடியவிரைவில் முழு உடல் நலனுடன் இல்லம் திரும்புவார் என  மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோக்களையும் திருமதி பிரேமலதா அவர்கள் வெளியிட்டார்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உடல் நலம் தேறியுள்ள நிலையில் மருத்துவமனையில் நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback