அமைச்சர், எம்எல்ஏ பதவியை இழந்த பொன்முடி, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர் கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு
தண்டனை விதித்த நீதிமன்றம், அமைச்சர், எம்எல்ஏ பதவியை இழந்த பொன்முடி, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர் கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996 முதல் 2002 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடிஅவரது மனைவி விசாலாட்சி , பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சிகா கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் மணிவண்ணன் , அறங்காவலர் நந்தகோபால் ஆகியோர் மீதுவிழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 2015-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றும் போதிய ஆதாரமில்லை என்று கூறி நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.
இருதரப்பினரின் வாத பிரதிவாத விசாரண முடிந்து அளித்த தீர்ப்பில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதனால் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது நீதிமன்றம்
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுவித்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது
இந்த வழக்கில் இருதரப்பு விசாரணை முடிந்து சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கில், கீழமை நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்து, அவரையும், அவரது மனைவியையும் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முன் தினம் உத்தரவிட்டது மேலும் .
அமைச்சர் பொன்முடி 64.90 சதவீதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளதாக கூறியுள்ள நீதிபதி தண்டனை விவரங்களை வருகிற 21-ந்தேதி காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி கூறி இருந்தார்
அதன்படி இன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில்:-
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும் இருவருக்கும் தலா 50 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மேலும் சிறைதண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இந்நிலையில், பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர், எம்.எல்.ஏ பதவியை பொன்முடி இழந்தார்.
இதன் காரணமாக பிற்படுத்தப்பட்டோர் நலன் அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு உயர்கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் கூடுதலாக ஒதுக்கீடுராஜ கண்ணப்பன் வசம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் துறை, கைத்தறித்துறை அமைச்சர் காந்திக்கு கூடுதலாக ஒதுக்கீடு முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்

