Breaking News

கன்னியாகுமரியில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு - மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கன்னியாகுமரியில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு - மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

 


இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

கன்னியாகுமரி மாவட்டத்தில்‌ வடகிழக்கு பருவமழை 2023 காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும்‌ மழையின்‌ காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, இதர அணைகளில்‌ நீர்வரத்து அதிகமாகி அணையின்‌ நீர்மட்டம்‌ கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும்‌ கன்னியாகுமரி மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து குளங்களும்‌ நிரம்பியுள்ளது. அணைகளில்‌ இருந்து உபரி நீர்‌ வெளியேற்றப்படுவதாலும்‌, தாமிரபரணி மற்றும்‌ இதர ஆற்றின்‌ கரையோரம்‌ வசிக்கும்‌ மக்கள்‌ மிகவும்‌ பாதுகாப்பாகவும்‌, அதே வேளையில்‌ ஆறு மற்றும்‌ குளங்களில்‌ குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்லவேண்டாம்‌ என கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

மாவட்டத்தில்‌ அதிகப்படியான குளங்கள்‌ உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள்‌ மற்றும்‌ பொது சொத்துகளுக்கு சேதம்‌ ஏற்பட்டுள்ளதால்‌ பொதுமக்கள்‌ ஆறு மற்றும்‌ குளத்தின்‌ கைகளுக்கு செல்ல வேண்டாம்‌ எனவும்‌, இவ்விடங்களுக்கு சென்று புகைப்படம்‌ எடுக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது. மேலும்‌ தென்‌ மாவட்டங்களில்‌ மீண்டும்‌ மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையத்தால்‌ தெரிவிக்கப்பட்டுள்ளதால்‌ பொதுமக்கள்‌ மிகவும்‌ பாதுகாப்பாகவும்‌, விழிப்புணர்வுடன்‌ இருக்குமாறும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback