நெல்லை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு | அட்டவணை இதோ
தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியதால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் டிசம்பர் மாதம் 17,ம் தேதியும் 18 தேதியும் வரலாறு காணாத கனமழை பெய்தது இதனால் மாவட்டத்தில் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியது.
மழை நின்ற பிறகும் வெள்ளம் வடிய காலதாமதம் ஆனது. இதனால் பள்ளிகளுக்கு ஜனவரி மாதம் 1-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது
6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்தல் டிசம்பர் 7-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. கனமழை, வெள்ளம் காரணமாக தேர்வு நடந்து கொண்டிருந்த நிலையில் நடக்க இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு மறுஉத்தரவு வரும் வரை நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளுக்கான தேதியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
அதன்படி 6 ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4ம் தேதி முதல் 10ம் தேதி வரையும்,
11, 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4 ம் தேதி முதல் 11ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு
4 -ம் தேதி அறிவியல் தேர்வும்
6-ம் தேதிகணக்கு தேர்வும்
9-ம் தேதி சமூக அறிவியல் தேர்வும்
10-ம் தேதி உடற்கல்வி தேர்வும் நடத்தப்பட இருக்கிறது.
Tags: கல்வி செய்திகள்
