கனமழை வெள்ளத்தால் திருநெல்வேலியில் இடிந்து விழுந்த கான்க்ரீட் வீடு வைரல் வீடியோ
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்துவருகின்றது
இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நகர பகுதியில் உள்ள சாலைகள், தெருக்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கின்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
விடாது பெய்த கனமழையால் மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இதனால், அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டு, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தாமிரபரணி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளத்தால் சிக்கியுள்ளவர்களை ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றார்கள்
இந்நிலையில், நெல்லை டவுன் பகுதியில் கனமழை வெள்ளத்தால் கான்க்ரீட் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், வீடு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வெள்ளத்தில் விழுகிறது. அந்த வீட்டில் இருந்தவர்கள் முன்கூட்டியே வெளியேறிவிட்டதால், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
https://twitter.com/Raghuvp99/status/1736698502149997031
Tags: வைரல் வீடியோ
