தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நாளை மாலை அடக்கம் செய்யப்படும்
தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்படும் - சுதீஷ்
தேமுதிக நிறுவனரும் தலைவரும்நடிகருமான விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார்,
நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் சிகிச்சை தரப்படுவதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டது.
இந்த சூழலில் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார். இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை 4.30 மணிக்கு விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. தற்போது மறைந்த விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
