விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் அமைச்சர் பெரியகருப்பன்
ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கூட்டுறவு கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு 2023-24 நிதி ஆண்டில் 1,500 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
ஆடு, மாடு, மீன், கோழி ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவு கடன் 2023 - 24 நிதி ஆண்டில் 1,500 கோடி ரூபாய் அளவில் வழங்கப்படும்
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கால்நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா நடைமுறை மூலதன கடன்களுக்கு 1,500 கோடி ரூபாய் வழங்கப்பட்டு இருக்கிறது.
வேளாண் கடன் அட்டை வைத்திருப்பவர்களும் இந்த திட்டத்தின் கீழ் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தேவையான ஆவணங்களை சமர்பித்து வட்டியில்லா கடன் பெற்றுக்கொள்ளாலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்
