கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற புதிதாக ஜனவரியில் இருந்து விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் தங்கம் தென்னரசு
அட்மின் மீடியா
0
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக ஜனவரியில் இருந்து விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த செப்.15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை விண்ணப்பிக்காமல் விடுபட்டவர்கள் வரும் ஜனவரி மாதம் முதல் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு:- இங்கு கிளிக் செய்யவும்
https://kmutappeal.tnega.org/
Tags: தமிழக செய்திகள்
