சொத்துக்குவிப்பு வழக்கு அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996 முதல் 2002 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடிஅவரது மனைவி விசாலாட்சி , பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சிகா கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் மணிவண்ணன் , அறங்காவலர் நந்தகோபால் ஆகியோர் மீதுவிழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 2015-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றும் போதிய ஆதாரமில்லை என்று கூறி நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.
இருதரப்பினரின் வாத பிரதிவாத விசாரண முடிந்து அளித்த தீர்ப்பில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதனால் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது நீதிமன்றம்
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுவித்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது
இந்த வழக்கில் இருதரப்பு விசாரணை முடிந்து சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கில், கீழமை நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்து, அவரையும், அவரது மனைவியையும் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடி 64.90 சதவீதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளதாக கூறியுள்ள நீதிபதி தண்டனை விவரங்களை வருகிற 21-ந்தேதி காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார்.
அன்றைய தினம் பொன்முடி, விசாலாட்சி அகியோர் நேரில் அல்லது காணொலி மூலமாக ஆஜராக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். தற்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் என்ன தண்டனை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மேலும் இந்த வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் அமைச்சர் பதவியை இழக்க வாய்ப்புள்ளது.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
