சென்னை தண்டையார்பேட்டையில் பாய்லர் வெடித்த விபத்தில் ஒருவர் பலி.!
சென்னை தண்டையார்பேட்டை உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (IOC) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பாயிலர் வெடித்து ஊழியர் பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை தண்டையார்பேட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 500ற்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தில் இருந்து பெட்ரோலியம், எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் டேங்கர் லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று பிற்பகல் 12 மணியளவில் பயங்கர சத்தத்துடன் பாயிலர் வெடித்ததாக கூறப்படுகிறது.இதனால், அச்சமடைந்த ஊழியர்களும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்களும் அலறியடித்து ஓடினர்.
இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் பெருமாள் (52) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
