Breaking News

தென்மாவட்டங்களுக்கு இன்று ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது! உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தென்மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கும் தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இன்று இயக்கப்படாது என  ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது

 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக  தென்மாவட்டங்களில் வரலாறு காணாத கன மழை பெய்து வருகின்றது மேலும் நேற்று கிளம்பிய ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது. 

மழை, வெள்ள பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கினால் பாதுகாப்பு இல்லை என்பதால் தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இன்று இயக்கப்படாது என  ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது

தென்மாவட்டங்களுக்கு தேவையான அளவுக்கு ஏற்ப அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback