Breaking News

எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவு!

அட்மின் மீடியா
0

எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவு!

 

எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவு!

எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட கோரமண்டல் உர தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஆய்வுக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு. நேற்று நள்ளிரவு திடீரென வாயு கசிவு ஏற்பட்டதால் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது!

சென்னை எண்ணூரில் பெரியகுப்பம் அருகே கோரமண்டல் என்ற தனியார் நிறுவனம் கப்பல்களிலிருந்து திரவ அம்மோனியா கொண்டு வர கடலுக்கடியில் பதித்துள்ள குழாய்களில் வாயு கசிவு ஏற்பட்டது

இதனால் சின்னகுப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் பகுதிகளை சேர்ந்த பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் கோரமண்டல் உர தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது மேலும் ஆய்வுக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

அதேசமயம் எண்ணூர் கோரமண்டல் ஆலையால் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு தொடர்பாக தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முன்வந்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback