எண்ணூர் தனியார் உரத்தொழிற்சாலையில் இருந்து அமோனியம் வாயுக் கசிவு பொதுமக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் முழு விவரம்
எண்ணூர் அருகே பெரியகுப்பத்தில் உரத்தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிவு பொதுமக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் முழு விவரம்
சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது, இன்று அதிகாலை அந்த தொழிற்சாலையில் இருந்து திடீரென அமோனியம் வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது
இந்த ரசாயன வாயு கசிவால் அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பீதி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் இருந்து வெளியேறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமோனியா வாயு வெளியேறிய கோரமண்டல் தொழிற்சாலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்!நுழைவுவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினருடம் மக்கள் வாக்குவாதம் செய்தனர் மேலும் எண்ணூர் கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோரமண்டல் தொழிற்சாலையின் திரவ அமோனியம் எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
